Monday, January 26, 2015

Quranic verses of today


இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ 
"என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!. 71:128‎

Sunday, January 25, 2015

Quranic verse of today

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ 
"இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!". 66:11

Sent from my BlackBerry 10 smartphone.

Saturday, January 24, 2015

Death Of King Abdul Alziz

inaa lillahi wa inna ilayhi rajiuuun. .......

Assalamu Alaykum My Muslim Brothers and Sisters in Islam---We all know that we lost one of our Muslim brother,Abdullah bin Abdulaziz Al Saud who was the King of Saudi Arabia and Custodian of the Two Holy Mosques from 2005 to 2015.
In this picture which i really loved to share with you Vividly moved me.in this picture-Mourners gather around the grave of Custodian of the Two Holy Mosques King Abdullah following his burial in Riyadh’s Al Oud cemetery on Friday. King Abdullah, who died early on Friday after a short illness, was buried in an unmarked grave in keeping with local religious traditions --

My brothers and Sisters in Islam,this should be a reminder for Alll us that how long or short this life is - All is left behind --Fmilies,relative,freinds,wealth and power ...only richness of DEEDS now count.... There is also A lesson in this picture to mankind which is blind earning money and status.worlds richest person going to grave with a piece of cloth and grave no different than a common mans grave.

May the Almighty Allaah azza wa jal forgive him and grant him jannatul firdous
Aaaminn----Aaaaminnn----Aaaminnn.

May the Almighty azza wa jal accept his service for the two holy mosques--
Aaaminnn-----Aaaminn-----Aaaminnn

May Allah grant us mercy ,FORGIVE OUR SINS and as well protect us....

Aameen ya rabbul Aaaamiiin.



I Love Prophet Muhammed (PBUH)


quran ayah of today

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் -   َ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்". 66:8

Sent from my BlackBerry 10 smartphone.

Friday, January 23, 2015

Islam

‎இஸ்லாத்தில் தெரிந்து
கொள்ளவேண்டியவை
 பெருமானார் (ஸல்) அவர்களின்
மனைவிமார்கள்
1 . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித்
(ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ்
(ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி)
பெருமானார் (ஸல்) அவர்களின்
குழந்தைகள்
பெண் மக்கள்
1 . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி)
ஆண் மக்கள்
1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ்  (ரலி)
3 . இப்ராஹீம்  (ரலி)
பெருமானார் (ஸல்) அவர்களின்
அடிமைகள்
1 . ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி)
2 . ஷக்ரான் (ரலி)
3 . அபூரா.:பி.: (ரலி)
4 . ஸல்மானுல் .:பார்ஸி (ரலி)
5 . ஸ.:பீனா (ரலி)
6 . அபூகப்ஜீஷா (ரலி)
7 . ருவை.:பி.: (ரலி)
8 . ரபாஹூல் அஸ்வத் (ரலி)
9 . .:பழாலா (ரலி)
10 . மித்அம் (ரலி)
பாச நபி (ஸல்) அவர்களின்
பாதுகாவலர்கள்
1 . அபூபக்கர் சித்திக் (ரலி)
2 . ஸ .:து  இப்னு முஆத்  (ரலி)
3 .
முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி)
4 . ஸுபைர் இப்னுல் அவ்வாம்
(ரலி)
5 . முகீரதுப்னு ஷு.:பாஹ்  (ரலி)
6 .  அபூ அய்யூபுல்
அன்ஸாரி  (ரலி)
7 . பிலால் இப்னு ரபாஹ் (ரலி)
8 . ஸ.: து இப்னு அபீவக்காஸ்
(ரலி)
9 . தக்வான் (ரலி)
10 . இப்னு அபீ மர்ஸத்  (ரலி)
நீதி நபி (ஸல்) அவர்களின்
நிர்வாகஸ்தர்கள்
1 . அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப்
(ரலி)
2 . பிலால் (ரலி)
3 . அஸத்  இப்னு உஸைத் (ரலி)
4 . முஐகீப் (ரலி)
கவிஞர்கள்
1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்
(ரலி)
2 .
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி
)
3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி)
முஅத்தினாக நியமனம் செய்யப்பட்ட
நான்கு பேர்கள்
1 . பிலால் (ரலி)
2 .
அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்
(ரலி)
3 . ஸ.:துல்கர்ள்  (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி)
பணியாளர்கள்
ஆண்கள்
1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்
(ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக்  (ரலி)
பெண்கள்
1 . அமதுல்லாஹ்
இப்னு ரஸீனா (ரலி)
2 . மாரியா (ரலி)
3 . கெளலா (ரலி)
பெருமானார் (ஸல்)
அவர்களின்
குதிரைகள்
ஒட்டகங்கள்
1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3 .
லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4 .
லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 .  வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்
வாள்கள்
        உருக்கு சட்டைகள்
1 . ம.:தூர்
1 . தாதுல் .:புழூல்
2 .
ஆழ்ப்
       2 . தாதுல் விஹாஷ்
3 .
துல்.:பிகார்
3 .  தாதுல் ஹவாஷீ
4 .   ஸம்ஸமா
4 . ஸ.:பரிய்யா
5 .
கலயீ
5 . .:பிழ்ழத்
6 .
ஹீ.:ப்
       6 . பத்ரா.:
7 .
ரஸூப்
7 . கிர்னிக்
8 .   மிக்தம்
9 .   கலீப்
வில்கள்
ஈகை நபி(ஸல்) அவர்களின்
ஈட்டிகள்
1 . பைளா.:
1 . முஸ்னா
2 .  ரவ்ஹா.:
2 .   முஸ்வீ
3 .  ஸ.:ப்ரா
4 .  ஜவ்ரா.:
5 .  சதாத்
இஸ்லாமிய போர்
போரின்
பெயர்
பிறை ஹிஜ்ரி
1 .        பத்ரு போர்
ரமலான்
01
2 .
உஹது போர்
ஷவ்வால்                     03
3 . சவீக்
சண்டை
ஷவ்வால் 03
4 .       பனு முஸ்தலிக்
போர்         ஷ.:பான்
05
5 . அஹழ்
போர்                              ஷ.:பான்
05
6 . கைபர்
போர்
ஷ.:பான் 07
7 .       மூத்தாப்  போர்
           ஷ.:பான்
07
8 .       மக்கா வெற்றி
          ஷவ்வால்                      08
9 .       ஹூனைன்  போர்
       ஷவ்வால்                     09
10 .      தபூக்  போர்
ரஜப்                                09
11 .       தாயிப் போர்
09
நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம்
பற்றி
நபிமார்கள்
வேதம் பாஷை
மூஸா (அலை)
தவ்ராத்             இப்ரானி
தாவூத் (அலை)
 ஸபூர் யூனானி
ஈஸா (அலை)
இன்ஜீல் ஸூர்யானி
முஹம்மது (ஸல்)
குர்ஆன் அரபி
க.:பா கட்டுவதற்கு கல்
எடுக்கப்பட்ட மலைகள்
1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா
கட்டியவர் : இப்ராஹீம் (அலை) ,
இஸ்மாயில் (அலை)
மனிதனின் அந்தஸ்துகள்
(தரஜாக்கள் )
முதலில் மனிதன் மனிதனாக இருக்க
வேண்டும்
1 . மனிதன்
2 . முஸ்லிம்
3 . மு.:மின்
4 . ஸாலிஹ்
5 . முத்தகீன்
6 . வலியுல்லாஹ்
7 . நுகபா
8 . நுஜபா
9 .     அப்தால்
10 .    அக்யார்
11 .    ஆரி.:பீன்
12 .    அன்வார்
13 .    அவ்தாத்
14 .    முக்தார்
15 .    இமாமனி
16 .    குதுப்
17 .    தாபியீ
18 .    சஹாபி
19 .    அன்சாரி
20 .    முஹாஜிரி
21 .    ஷஹீத்
22 .    சித்திக்
23 .    நபி
24 .    ரஸூல்
25 . உலுல் அஜ்ம்
26 . கலீலுல்லாஹ்
27 . உலக முழுமைக்கும் ரஸூல்
28 . காத்தமுன் நபி
29 . ரஹ்மத்தில் ஆலமீன்
30 . ஹபீபுல்லாஹ்
நபிமார்கள் மொத்தம் -  1
24 000 பேர்
ரஸூல்மார்கள்                           -
313 பேர்
குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள்
 - 25 பேர்
313 பேரில் உலுல் அஜ்ம்       -
5 பேர்
1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்)
திருக்குர்ஆனின் வசனம்     -
6666
சொற்கள்
 -     75430
எழுத்துக்கள் -
326671
சுவர்க்கத்தின் பெயர்கள்
1 . தாருல் மகாம்
2 . தாருல் ஸலாம்
3 . ஜன்னத்துல் ம.:வா
4 . ஜன்னத்துல் நயீம்
5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ்
6 . ஜன்னத்துல் அத்னு
7 . இல்லியூன்
8 . ரைய்யான்
நான்கு வகை உயிர்கள்
1 . ரூஹுல் ஜிமாத் -
ஜடப்பொருள்
2 . ரூஹுல் நபாத்து - தாவர
உயிர்
3 . ரூஹுல் ஹைவான்  -
பிராணி  உயிர்
4 . ரூஹுல் இன்சான் -
மனித  உயிர்
நப்ஸின் ஏழு வகைகள்
1 .    நப்ஸ் அம்மாரா
2 . நப்ஸ் லவ்வாமா
3 . நப்ஸ் முத்மாயின்னா
4 . நப்ஸ் முல்ஹிமா
5 . நப்ஸ் ராலிய்யா
6 . நப்ஸ் மர்லிய்யா
7 . நப்ஸ் காமிலா
மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்
1 .    தபக்கஹூத்துஸ் தூர்
2 . தபக்கத்துல் கல்பி
3 . தபக்கத்துஷ் ஷிகாப்
4 . தபக்கத்துல் .:புஆத்
5 . தபக்கத்து ஹூப்பத்துல்
கல்லி
6 . இல்முல்லதுன்னி
7 . தபக்கத்துஸ் ஸுவைதா

Sent from my BlackBerry 10 smartphone.

Today's quran Ayah


‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ  رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது". "எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்". 60:4-5

Sent from my BlackBerry 10 smartphone.

Wednesday, January 21, 2015

Today's quran ayan

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் -   رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்". 59:10

Sent from my BlackBerry 10 smartphone.

quranic verses

இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41

quranic ayah of today

இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ   وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ  وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87
இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ   وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ  وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87

Quranic verses of today

இன்று ஒரு குர்ஆன் வசனம் - وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ  ﴿3:105﴾
3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

Tuesday, January 20, 2015

quranic ayah of today

இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ   وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ  وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87

quran Ayah of today

இன்று ஒரு குர்ஆன் வசனம் -   رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ  إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”. 28:16

letter of a mom

அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக
வைக்கும் உண்மை சம்பவம் இது.
பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம்.
அந்த தேசத்தில் ஒரு பெண்
தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண்
இல்லை. தன் மற்றைய
கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய
நிலை. கணவரின்
இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால
வாழ்வு பற்றியதாகவே இருந்தது.
தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள்.
மீகுதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார்
செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன்.
புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன.
பாடசாலையில் முதல் தரத்தில்
சித்தி எய்துபவன் அவன். காலங்கள்
உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த
பெறுபேற்றினை ஈட்டி அந்த
பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும்
பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த
தாய் ஆவலுடன்
பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின்
வகுப்பறை எது என
அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனிற்கு பிடித்தமான
உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்த தாய் மகன்
வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள்
சென்று படுத்து விட்டான்.
அவளிற்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன்
என் பாடசாலைக்கு வந்தாய்?.
அங்கு அழகான பணக்காரர்கள்
மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்
நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய
அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என்
பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான்
கோபமாக. அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம்
கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும்
மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும்
நண்பர்கள் முன் வர வேண்டாம் என
தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க
சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன்
இருப்பது வெட்கம் என்றும், தான்
ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.
அவள் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து.
இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ
கல்லூரிக்கு மகன்
தெரிவானது அவளிற்கு தெரியவந்தது.
தலை நகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மிகுதமிருந்த
அனைத்து சொத்துக்களையும்
விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5
ஆண்டுகள் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல
முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும்
பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம்
இருந்து வந்தது. அதில், " உம்மா, நான்
இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த
வைததியர்களில் ஒருவன். குருடியின்
மகன் வைத்தியன் என்பது தெரிந்தால்
எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால்
நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண்காணாத தேசம்
செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின்
வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும்,
வறுமையும்,
அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம்
எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும்
வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த
வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல
இளகிய குணம் படைத்தவள்.
இறையட்சமிக்கவள். அவளும்
ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயக
நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம்
நன்றாகவே நடந்தன.
அவளது கணவன் அமெரிக்காவில்
இருந்து திரும்பி வந்தான்.
தனது எஜமானியின் கணவர் வருகிறார்
என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சில
நாளிகைகளின் பின்னர் சாப்பிட
அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில்
அள்ளி திணித்தான். திடீரென அவன்
முகம் மாறியது. கருமை அவன் முகத்தில்
அப்பி கொண்டது. சடாரென
தனது மனைவியின்
முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ
தான் சமைத்தாயா?" என்று.
மனைவி குழப்பத்துடன்
இல்லையே என்றாள். " அப்படியானால் யார்
சமைத்தது" இது அவனது இரண்டாம்
கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள்
என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன்
அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள்
இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும்,
வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. என்
மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின்
இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால்
இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த
வைத்தியன் சொன்னான் தன்
மனைவியை பார்த்து, "இந்த
குருடியை உடனடியாக
கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு.
கண்காணாத இடத்தில்". கத்தினான். அவன்
சத்தம் அடுப்படியில் நின்ற அந்த
அபலை தாயின் இதயத்தில்
முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
வேண்டுமா என எண்ணி அழுதாள்.
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே,
அவனது மனைவியான அந்த பெண்
வைத்தியர்
வேறு வழியின்றி அவளிற்கு போதுமான
பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர்
தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த
இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள்
அழுகையுடன்.
காலம் மீண்டும் வேகமாக அசைந்தது.
இப்போது அந்த வைத்தியனின்
தலை மயிர்கள் பழுக்க
ஆரம்பித்து விட்டன. உடல் பலம்
சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
தொடரான சுயநலன், நன்ற மறத்தல் போன்ற
காரணங்களினால் கருத்து மோதல்
ஏற்பட்டு அந்த வைத்தயரான மனைவியும்
இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்
புரிந்து கொண்டாள்.
இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர
வேறு எதுவும் இருக்கவில்லை.
தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான
நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட
யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.
மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்புக்கள் அவன்
உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன.
ஒரு முறை நடுநிசியில்
எழும்பி உம்மா என கத்தி அழும்
அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின்
பாரம் புரிந்து போனது.
ஒரு நாள் காலை அவன்
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர்
பேசினார். "உன் தாய் தள்ளாத வயதில்
மரணிக்கும் தறுவாயில் ஸகராத் எனும்
நிலையில் இருக்கிறாள்" என்பதே அந்த
செய்தி. உடனடியாகவே அவன்
தனது காரில் கிளம்பி தாயிருக்கம்
இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.
ரூகூ போன நிலையில் அவளை கட்டிலில்
கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "உம்மா"
என கதறினான். கண்ணீர் விட்டான்.
ஜனாஸாவை நல்ல முறையில் அடக்கம்
செய்ய உதவினான்.
இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன்
வருவானாக இருந்தால் மட்டும்
கொடுக்குமாறும், இல்லையெனில்
எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும்
அவர் சொன்னார். பிரித்து வாசித்தான்.
அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர்
அந்த பாலைவெளியையே சகதியாக
மாற்றியது.
அதில் இருந்த வரிகள் இதுதான்....
"அன்பின் மகனே!..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால்
மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடிதான்.
உனக்கு குருடி தாய் இருந்திருக்க
கூடாது தான். எனக்கு உன் உள்ளம்
புரிகிறது.
உனது உள்ளத்து உண்ர்வுகளை நான்
பெரிதுமே மதிக்கின்றேன். நான்
உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது.
எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன்.
உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ
புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன்
குருடியானேன் என்று!
அப்போது உனக்கு சின்ன வயது.
பாதையில் நின்று நீ விளையாடிக்கொண்ட
ிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில்
பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம்
இருந்தால் மட்டுமே உன்
பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம்
என்றனர். என்ன
செய்வதென்று தெரியவில்லை. நேரமும்
போதாது.
அதனால்....
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம்
செய்து உனக்கு பார்வை கிடைக்க
செய்தேன்.
எனது கண்மணியே இன்று உன்
கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை,
வாழ்க்கையை பார்ப்பதும் அந்த
கண்களாளேயே!...
உனக்கு இதுவும் அவமானம் என்றால்
உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு.
ஏனென்றால் அது ஓர் குருடியின்
கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால்
அப்படியே விட்டு விடு. அந்த கண்களால்
நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்."
இப்படிக்கு, என்றுமே அன்புள்ள,
உன் குருட்டு உம்மா.

இன்று ஒரு குர்ஆன் வசனம-

 -   رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”. 28:24